Seed Certification
விதை சேமிப்பு :: நோக்கம்

விதை சேமிப்பு என்றால் என்ன ?

விதை அறுவடை செய்த காலம் முதல் நடவு செய்யும் காலம் வரை விதையின் அதிகபட்ச முளைப்புத் திறன் மற்றும் வீரியம் ஆகியவற்றை பராமரித்த

விதைச் சேமிப்பின் நிலைகள்

விதைகள் வினையியல் அடைந்தது முதல் முளைக்கும் வரை (அ) அவை உபயோகமில்லாமல் உயிரற்ற நிலையில் எறியப்படும் வரை அவைச் சேமிப்பில் உள்ளதாக கருதப்படும்.

விதைச் சேமிக்கும் காலம் கீழ்க்கண்ட நிலைகளாக பிரிக்கலாம்

  1. செடியில் உள்ள சேமிப்பு (வினையியல் முதிர்ச்சி முதல் அறுவடை வரை)
  2. அறுவடைக்குப் பின் சுத்திகரிக்கும வரை கிடங்குகளில் சேமிப்பு
  3. கிடங்குகளில் சேமிப்பு
  4. போக்குவரத்தின் போது சேமிப்பு (இரயில்வே பெட்டிகள், லாரிகள், வண்டிகள், இரயில் ஷெட் போன்றவை)
  5. உபயோகிப்பவர் பண்ணை

முன்னுரை

விதையின் ஈரப்பதம் இழப்பைத் தாங்கிக் கொள்ளும் தன்மையே அதன் வீரியத்தை உலர்ந்த நிலையில் பராமரிக்க உதவுகிறது. சேமிப்பு என்பது தாய் செடியில் விதைகள் வினையியல் முதிர்ச்சி அடைந்தவுடன் ஆரம்பம் ஆகிறது. அறுவடைக்குப் பின் விதைகள் சேமிப்புக் கிடங்கிலோ, போக்குவரத்திலோ விற்பனை நிலையங்களிலோ சேமிக்கப்படுகிறது. விவசாயிகள் பண்டைக் காலத்தில் பண்ணையில் சிறிய அளவில் சேமித்து வைத்திருந்த விதைகள் பயன்படுத்தினர். ஆனால் புதிய கிரக மற்றும் வீரிய இரகங்களின் அறிமுகத்தால் மற்றும் நவீன வேளாண் முறைகளின் அறிமுகத்தால் விதைச் சேமிப்பில் புதிய உத்திகளின் தேவை அதிகரிக்கப்பட்டுவிட்டது.

பண்டைக்கால எளிய முறைகளான விதைகளை உப்பில் வைப்பது, செம்மண் நேர்த்தி போன்றவைகளை இக்கால வேளாண்மையில் நிறைவேற்ற முடியாது, ஏனெனில்

  1. அதிக அளவு விதைகளை சேமிக்கவேண்டும்
  2. இரகங்கள் மற்றும் சிற்றினங்களின் பரிமாற்றம்
  3. பேரினங்களில் பரிமாற்றம்

சேமிக்கப்படும் பொருட்களை பொருத்து சேமிக்கும் முறை வேறுபடுகிறது. இன்றைய காலத்தில் சேமிப்பு முறைகள் சாதாரண கிடங்கு முறை சேமிப்பு முறைகளில் இருந்து உறைந்த நிலை சேமிப்பு மற்றும் மரபணு சேமிப்பு போன்றவை வளர்ந்துள்ளன.

விதைச் சேமிப்பின் நோக்கம்

முதல் நிலை விதைத் தரத்தை அதாவது, முளைப்புத்திறன், புறத்தூய்மை, வீரியம் போன்றவை, சேமிப்புக் காலத்தில் அதற்கு தகுந்த (அ) மேம்பட்ட நிலையில் பராமரிப்பதே விதைச் சேமிப்பின் நோக்கமாகும். விதையிலிருந்து செடி முளைக்கும் திறனை ஏற்புடைய அளவில் பராமரிப்பதே விதைச் சேமிப்பின் நோக்கம். இதனை நிறைவேற்றுவதற்கு, விதைகளின் சிதைவைக் குறைத்து ஏற்புடைய அளவில் விதையின் தரத்தை உயர்த்தி தேவைப்படும் காலத்திற்கு பராமரிக்கவேண்டும்.

 

அடுத்து
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam